
இந்திய சினிமாவில் பிரபலமாக இருப்பவர் ஷாருக்கான். இவர் கடந்த 2023ம் ஆண்டு ‘டின்கி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் வருண் குல்கர்னியும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு கடுமையான சிறுநீரக பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் வாரத்திற்கு 2 முறையாவது டயாலிசிஸ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில் குல்கர்னியின் நண்பர் ரோஷன் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது உடல்நிலை குறித்த பதிவை பதிவிட்டிருந்தார். குல்கர்னி தனது சிகிச்சையின் காரணமாக நிதி சிக்கல்களை எதிர்கொள்கிறார் என்றும், தனது மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாமல் சிரமப்படுவதாகவும் ஷெட்டி கூறினார். எனவே, தேவைப்படும் இந்த நேரத்தில் குல்கர்னிக்கு உதவ முன்வருமாறு அனைவரிடமும் அவர் உதவி கோரினார்.