INDIA  என்று எதிர் கட்சிகள் கூட்டணிக்கு பெயர் வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, இந்தியா என்று சொன்னால் உள்ளத்திலே அந்த உணர்வு இருக்கணும். ஒரு இந்தியன் என்று சொல்லும்போது உள்ளத்தில்… ரத்தத்தில்… DNAல  இந்தியன் என்கின்ற உணர்வு இருக்கணும். உதாரணத்துக்கு ஒரு ஒரு கட்சியாக பார்ப்போம்…  திரு மு.க ஸ்டாலின் அவர்கள் எடுத்துக் கொள்வோம். இந்த கட்சி 1960 காலகட்டத்தில் பிரிவினை பேசிய கட்சி.

அப்புறம் நேரு அவர்கள் கேபினேட்டில் எந்த அரசியல் கட்சி பிரிவினை பேசுகிறீர்களோ, உங்கள் மேல் பொலிட்டிக்கல் அந்தஸ்து ரத்த செய்வோம் என்ற ஸ்பெஷல் சட்டத்தை கொண்டு வருவோம் என்று சொன்னதும்,  பிரிவினைவாதத்தை விட்டுட்டு,  இவங்க பேசிட்டு இருக்காங்க..

இன்னைக்கும் மாநிலங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதில்லை யார் நம்பர் 1 என்றால் திமுக. அவர்கள் இந்தியா என்கின்ற வார்த்தையை பேசுவது வேடிக்கை மட்டும் அல்ல, விசித்திரம் மட்டுமல்ல, ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்தது உமர் அப்துல்லா பரூக் அப்துல்லா போன்றவர்கள்…  இந்தியாவோடு சேராமல் இருந்தவுங்க.

ஆர்டிகள் 370 என்பது காஷ்மீருக்கு தனிச்சட்டம், தனி அந்தஸ்து. இந்தியாவோடு  இணையாமல் ஒரு பகுதி இருந்தது. அதை எதிர்த்தவர்கள் இன்னைக்கு இந்தியாவ பத்தி பேசுறாங்க.  அடுத்தது இந்தியாவில குறிப்பாக….  ஜேஎன்யுவில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு எல்லாம் போயி,  தேசத்துக்கு எதிரான கருத்துக்களை பேசியவர்கள் காங்கிரசினுடைய தலைவர்கள். அவங்க இன்னைக்கு இந்தியாவை பத்தி பேசுறாங்க.

மக்கள் யார் உண்மையான இந்தியன் ? யார் இந்தியா என்பதை தன்னுடைய நெஞ்சத்திலே வச்சிருப்பாங்கன்னு பாக்குறாங்க. அதுல  நரேந்திர மோடி அவர்கள்…  பிஜேபி அது என்டிஏ கூட்டணி. எங்க ஊர்ல ஒரு கதை சொல்லுவாங்க. அதாவது ஒரு நாய்க்கு புலி ஆகணும்னு ஆசையாம். அந்த நாய் ஒருத்தர் கிட்ட போய் ஐடியா கேட்டுச்சா. எப்படி புலி ஆகிறது என்று…

அதுக்கு அந்த நாயினுடைய நண்பர் சொன்னாராமா ? நீ புலி மாதிரி கோடு போட்டுட்டா  ஒன்னை புலி என்று  சொல்லுவாங்கன்னு சொல்லிச்சாம்.  உடனே அந்த நாய் புலி மாதிரி கோடு போட்டு வந்து,  நானும் புலி என்று சொல்லுச்சாம்மா…. அப்படித்தான் எதிர்க்கட்சி நண்பர்கள் தங்களை இந்தியா என்று  சொல்லிக் கொள்வது எப்படி இருக்குன்னா…?  புலியை பார்த்து, நானும் கோடு போட்டுக் கொண்டு புலி என்று சொல்வதைப் போல உள்ளது.

மக்களுக்கு தெரியும் உண்மையான இந்தியா யாரு ? உண்மையான பாரதம் யார் ? இன்னைக்கு இவர்களுடைய  வேஷம் எல்லாம் வெட்ட வெளிச்சமாக இருக்கிறது. பிரிவினை – பிரிவினைவாதம் பேசியவர்கள்,  காஷ்மீர் இந்தியாவோடு இல்லை என்று சொன்னவர்கள், JNU – வில் போய்  இந்தியாவுக்கு எதிராக கோஷம் போட்டவர்கள்…. இவர்களெல்லாம் ஒரு ரூம்ல ஒன்னா ஒன்றாக உக்காந்து இந்தியா என்று சொன்னால்,  மக்கள் அவர்களை இந்தியா என்று ஏற்றுக் கொள்வார்களா ? என தெரிவித்தார்.