இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

அதாவது அந்த வீடியோவில் பெண் ஒருவர் சோபாவில் அமர்ந்திருக்கிறார். மற்றொரு பெண் கையில் கேக் வைத்திருக்கிறார். அதை அவர் அங்குள்ள மேசையில் வைக்க முயற்சிக்கிறார். அப்போது அவரது நண்பர்கள் அவர்கள் இருவரின் மீதும் ஸ்னோ ஸ்ப்ரேயை அடிக்கிறார்கள். இதனால் அவர்கள் தலை முழுவதும் பணி படர்ந்தது போல இருக்கிறது.

இந்நிலையில் சிறிது நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்படுகிறது. இதில் அவர்கள் இருவர் மீதும் தீப்பிடித்து பற்றி எரிய தொடங்கியது. இதனால் அவர்கள் இருவரும் அலறி துடிக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.