இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு வீட்டருகே தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் முதலமைச்சர் இல்லமான ஓக்ஓவர் அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த வீட்டில் அதிகாலையில் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைப்பதால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.

ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில், சிம்லா, ஹிமாச்சல் | முதல்வர் இல்லமான ஓகோவரில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள பழைய காலி கட்டிடத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.2 மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. உயிர்ச்சேதம் இல்லை, அருகில் உள்ள கட்டிடங்கள் தீயில் இருந்து காப்பாற்றப்படவில்லை என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது..