பிரதமர் மோடி டெல்லி- மும்பை விரைவு சாலையில் உள்ள புதுடெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார். இந்த பகுதி டெல்லி- மும்பை விரைவு சாலையில் 246 கிலோ மீட்டர் அளவில் அமைந்துள்ள நிலையில், ரூ.‌12,150 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் புதுடெல்லியில் இருந்து ஜெய்பூருக்கு பயண நேரம் 5 மணி நேர்த்திலிருந்து 3.5 மணி நேரமாக குறையும்.

இந்நிலையில் டெல்லி-மும்பை விரைவு சாலை 1386 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இது இந்தியாவின் மிக நீளமான விரைவு சாலை ஆகும். மேலும் இந்த  சாலையை நாட்டுக்கு அர்பணிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய பங்களிப்பு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.