உகாண்டா நாட்டைச் சேர்ந்த டோரோ ராாம்ஜ்யத்தின் புகழ்பெற்ற இளம் மன்னரான Oyo Nyimba தனது 34 வது வயதில் காலமானார். சிறு வயதிலேயே அரியணை ஏறி உலக அளவில் கவனத்தை ஈர்த்த இந்த இளம் மன்னரின் திடீர் மறைவு உலக நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1995 ஆம் ஆண்டில், அவர் தனது மூன்றாவது வயதிலேயே நாட்டின் மன்னராகப் பொறுப்பேற்று மிகப்பெரிய வரலாற்று சாதனையைப் படைத்தார். மிகக் குறைந்த வயதில் மகுடம் சூடிய மன்னர் என்ற பெருமையைப் பெற்ற அவர், கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கச் செய்திருந்தார். அவரது பதவிக்காலத்தில் பல்வேறு சமூக மற்றும் கலாச்சார மேம்பாட்டு நடவடிக்கைகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
தற்போது அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் பிரிந்ததற்கான அதிகாரப்பூர்வ மற்றும் முறையான காரணங்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. உலகின் மிக இளைய மன்னர்களில் ஒருவராக அறியப்பட்டவரது இந்த அகால மரணம் சர்வதேச அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகின்றன.
