சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு கருப்பு நிற ஆட்டோ ரிக்ஷாவை பல ஆண்கள் சேர்ந்து வலுக்கட்டாயமாக ரயிலின் லக்கேஜ் பெட்டிக்குள் தள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.

​மத்திய ரயில்வேக்கு (Central Railway) சொந்தமான ரயிலின் லக்கேஜ் கோச்சிற்குள், பலரின் உதவியோடு அந்த ஆட்டோவை தள்ளி உள்ளே ஏற்ற முயலும் காட்சிகள் அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது நகைச்சுவையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

​ஒரு முழு ஆட்டோ ரிக்ஷாவையே ரயிலுக்குள் ஏற்றி எடுத்துச் செல்ல முயன்ற அந்த மனிதர்களின் துணிச்சலையும், அவர்களின் திட்டத்தையும் பார்த்து இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். “இந்தியர்களின் திறமைக்கு எல்லைகளே இல்லை” எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

​கூட்டம் நெரிசல் நிறைந்த ஆட்டோக்களைப் பார்த்த நமக்கு, ரயிலுக்குள்ளேயே ஆட்டோவை ஏற்ற முயன்ற இந்த சம்பவம் பெரும் வேடிக்கையாக அமைந்துள்ளது. “பாய்.. ஐடியா என்னவோ ரொம்ப சாலிடா தான் இருக்கு, ஆனா இத எப்படி சாத்தியப்படுத்த போறீங்க?” என நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்.