ஐபிஎல் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் காதலித்துத் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், வரும் நவம்பர் 10-ஆம் தேதி கிரீஸ் நாட்டில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் தகவல் பெரும் தீயாகப் பரவி வருகிறது.
பிரபல சினிமா ஊடகவியலாளர் கிறிஸ்டோபர் கனகராஜ் வெளியிட்ட தகவலின்படி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனும், தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர். இந்தத் திருமணம் பொதுவெளியில் இல்லாமல், வெளிநாடான கிரீஸில் மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொள்ளும் ஒரு எளிய மற்றும் அந்தரங்கமான விழாவாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
🚨 BIG BREAKING NEWS 🚨
SRH owner Kavya Maran and music composer Anirudh Ravichander are set to tie the knot on November 10 in Greece.
The wedding is expected to be an intimate private ceremony, with only close friends and family reportedly invited.( Source Christopher… pic.twitter.com/iCOk71aF8o
— Central Cricket (@arshdeep3444) August 17, 2026
“>
கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள இரண்டு பிரபலங்கள் திடீரென இணைவது குறித்த இந்தச் செய்தி, எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரு தரப்பிலிருந்தும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
