டெல்லி மெட்ரோ நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர் ஒருவர் பெண் பயணியை ரகசியமாகப் புகைப்படம் எடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு டெல்லி மெட்ரோ நிலையத்தில் வழக்கம்போல் பயணிகள் நடமாட்டம் இருந்தபோது, அங்குப் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர், பெண் பயணியை அவருக்குத் தெரியாமல் ரகசியமாகத் தனது செல்போனில் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கவனித்த சக பயணிகள் சிலர், உடனடியாக அந்த வீரரிடம் தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனால் அந்தப் பாதுகாப்புப் படை வீரருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பயணிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் வாக்குவாதம் முற்றி, திடீரென இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியது. மெட்ரோ நடைமேடையில் பயணிகள் கூட்டம் கூடியதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் குழப்பமும் நிலவியது.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மெட்ரோ நிலைய மூத்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர். பாதுகாப்புப் பணியில் இருந்த வீரரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
View this post on Instagram
“>
இதையடுத்து, பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட சிஐஎஸ்எஃப் வீரரை அதிகாரிகள் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் துறை ரீதியான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
