இந்தியாவின் முன்னணி உள்நாட்டுத் தொடரான துலீப் டிராபி விரைவில் தொடங்க உள்ள நிலையில், சென்ட்ரல் ஜோடிஅணியின் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியின் கேப்டனுமான  ரஜத் படிதார் பெங்களூரு வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவர் வந்திறங்கியபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்தில்  நடைபெறவுள்ள துலீப் டிராபி தொடருக்காக ரஜத் படிதார் சென்ட்ரல் ஜோடி அணிக்குத் தலைமை தாங்க உள்ளார். ந

டப்புச் சாம்பியனான சென்ட்ரல் ஜோடி அணியின் கேப்டனாக அவர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, அவர் அணிந்திருந்த காலணிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன. கிரிக்கெட் பந்தின் வடிவமைப்பு மற்றும் சிவப்பு நிற உத்வேகத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட விராட் கோலியின் புகழ்பெற்ற ‘ஒன்8’ (One8) பிராண்டின் Seam XVIII OG ரெட்-பால் ஸ்டைல் ஷூக்களை அவர் அணிந்திருந்தார்.

 

சுமார் 7,000 ரூபாய் மதிப்புள்ள இந்த விசேஷ காலணிகளுடன் அவர் நடந்து செல்லும் வீடியோவை ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். “ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், விராட் கோலியின் ஐகானிக் நம்பர் 18 ஷூக்களை அணிந்து துலீப் டிராபி தொடருக்காக பெங்களூரு வந்துள்ளார்” என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கடந்த முறை சென்ட்ரல் ஜோடியை வெற்றிகரமாக வழிநடத்திச் சாம்பியன் பட்டம் வென்று தந்த படிதார், இந்த முறையும் தனது கேப்டன்ஷிப் மூலம் அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் செல்வார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.