பிரபல மூத்த நடிகை ஷகீலா சமீபத்தில் கழுத்துப் பகுதியில் தீவிர நரம்பு பாதிப்பு காரணமாகக் கடுமையான அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அளவுக்கு அதிகமாகச் செல்போன் பயன்படுத்தியதே தனது இந்த மோசமான உடல்நலப் பாதிப்பிற்கு முக்கியக் காரணம் என்று அவரே உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

படுக்கையில் ஒரு பக்கமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு மணிக்கணக்கில் கேம் விளையாடுவதும், சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’  பார்ப்பதுமே தனது கழுத்து நரம்புகளைக் கடுமையாகப் பாதித்தது என்று ஷகீலா கூறியுள்ளார். இதனால் அவர் சொல்ல முடியாத அளவுக்குக் கடுமையான உடல் வலியை அனுபவித்துள்ளார்.

இந்தச் சிகிச்சைக்காகவும் அறுவை சிகிச்சைக்காகவும் அவருக்குச் சுமார் 3 லட்ச ரூபாய் வரை செலவாகியுள்ளது. அளவுக்கு அதிகமான செல்போன் பயன்பாடு பண விரையத்தை மட்டுமின்றி, எந்த அளவுக்கு உயிரையே வதைக்கும் நரம்பு வலியைத் தரும் என்பதற்குத் தனது அனுபவமே சாட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையையும் அவர் விடுத்துள்ளார். தினமும் செல்போன் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டாயம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும், குறிப்பாகச் சிறு குழந்தைகளைச் செல்போன் திரைப் பழக்கத்தில் இருந்து தூரமாக வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“>

நாம் அசால்ட்டாகச் செய்யும் சில தினசரிப் பழக்கங்கள் எவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டு போய் நிறுத்தும் என்பதற்கு நடிகை ஷகீலாவின் இந்த அனுபவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது. எனவே அளவுக்கு மீறிய செல்போன் பயன்பாட்டைக் குறைத்து ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவசியமாகும்.