உடலில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், எந்த மருத்துவரை அணுகுவது என்பது பலருக்கும் குழப்பமாக இருக்கும். எல்லா உடல்நலப் பிரச்சினைகளுக்கும் ஒரே மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது அவசியமில்லை. பொதுமருத்துவர் ஆரம்பநிலையில் உடல்நலப் பிரச்சினையை மதிப்பிட்டு, தேவையானபோது உரிய சிறப்பு மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம்.

இதயத் துடிப்பு, இதய நோய் அல்லது இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இதயநோய் நிபுணர் , சருமத்தில் தொடர்ந்து ஏற்படும் பிரச்சினைகளுக்கு தோல் மருத்துவர் ஆகியோரை அணுகலாம். சர்க்கரை நோய், தைராய்டு மற்றும் ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளுக்கு உட்சுரப்பியல் நிபுணர்  சிகிச்சை அளிக்கிறார்.

வயிறு மற்றும் செரிமானக் கோளாறுகள், கல்லீரல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு காஸ்ட்ரோஎன்டராலஜிஸ்ட், மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு நரம்பியல் நிபுணர் , எலும்பு, மூட்டு மற்றும் தசைநார் பிரச்சினைகளுக்கு எலும்பியல் நிபுணர் ஆகியோர் சிகிச்சை அளிக்கின்றனர். சிறுநீரக நோய்களுக்கு Nephrologist, கண் பிரச்சினைகளுக்கு Ophthalmologist, காது-மூக்கு-தொண்டை பிரச்சினைகளுக்கு ENT நிபுணர் என துறை வாரியாக மருத்துவர்கள் உள்ளனர்.

அதேநேரத்தில், ஒரு அறிகுறியை வைத்து நாமாகவே நோயை முடிவு செய்து குறிப்பிட்ட ஸ்பெஷலிஸ்டை தேர்வு செய்வதைவிட, தேவையானபோது பொதுமருத்துவரிடம் முதலில் ஆலோசனை பெறுவது பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கும். குறிப்பாக திடீரென ஏற்படும் கடுமையான நெஞ்சுவலி, மூச்சுத்திணறல், மயக்கம் போன்ற அவசர அறிகுறிகள் இருந்தால் வழக்கமான மருத்துவர் சந்திப்புக்காக காத்திருக்காமல் உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டும்.