கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்று கூறி திமுக – பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு மழுப்பலான மற்றும் பரபரப்பான பதிலை அளித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . கூட்டணி குறித்த கேள்விக்கு அவர் நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல், “கூட்டணி உருவாகும்போது பார்ப்போம்” என்று கூறியிருப்பது தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக மாறி விவாதிக்கப்பட்டு வருகிறது.
மேலும், பேட்டியின் தொடர்ச்சியாகப் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை இன்னும் மாறவில்லை என்றும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே மாறி உள்ளார்களே தவிர, விவசாயிகளுக்கும் பெண்களுக்கும் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்றும் ஆளுங்கட்சியைக் கடுமையாக சாடினார்.
தொடர்ந்து நீட் தேர்வு விவகாரம் குறித்துப் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தையே நாடலாமே தவிர, இந்தத் தேர்வை ரத்து செய்வது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதற்குச் சமமாகும் என்றும், இருப்பினும் இந்தத் தேர்வில் உள்ள பிரச்சினைகளை மத்திய அரசு தற்போது சரி செய்துள்ளது என்றும் தெளிவுபடுத்தினார்.
அதுமட்டுமின்றி, தவெக அரசு தனி கமிட்டியை அமைத்து, கோவை மற்றும் மதுரை பகுதிகளுக்குத் தகுதியான திட்ட அறிக்கையை சமர்ப்பித்து மெட்ரோ ரயில் திட்டங்கள் வருவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அதிரடியாகத் தனது கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
