தமிழகச் சட்டமன்றத்தில் காவிரி நதிநீர்ச் சிக்கல் தொடர்பாகப் பேசிய முதலமைச்சர் விஜய், காவிரி விவகாரத்தில் தாம் ‘சீப் பாலிடிக்ஸ்’ செய்ய விரும்பவில்லை எனக் கூறியிருந்தார். மேலும், கர்நாடக முதலமைச்சர் சிவக்குமாருடன் பேசித் தண்ணீரைக் கொண்டு வந்துவிட முடியும் என்றும் அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டிருந்தார்.
முதலமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி இதற்கு மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள கார்த்தி, “காவிரி விவகாரத்தில் சீப் பாலிடிக்ஸ் செய்ய விருப்பமில்லை என்று கூறும் முதல்வர் விஜய், கரூர் பேரவலம் முதல் காவிரி நதிநீர்ச் சிக்கல் வரை செய்து வருவது எல்லாமே மலிவான அரசியல் தான்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் சீப் பாலிடிக்ஸ் செய்ய விருப்பமில்லை – முதல்வர் விஜய்
கரூர் பேரவலம் முதல் காவிரி நதிநீர்ச்சிக்கல் வரை நீங்கள் செய்வது சீப் பாலிடிக்ஸ்தானே?
அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, எதிர்க்கட்சிகளிடம் பேசத் துப்பில்லை. ஆனால், கர்நாடக முதல்வர் சிவக்குமாரிடம்…
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) August 8, 2026
மேலும், அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி எதிர்க்கட்சிகளுடன் பேசத் துப்பில்லாமல், கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவது ஒரு முட்டாள்தனமான முடிவு என்றும், சட்டமன்றத்தில் விஜய் ஒரு கேவலமான சப்பைக்கட்டைக் கட்டியுள்ளார் என்றும் சாடியுள்ளார்.
