எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று காலை நீலாங்கரை இல்லத்தில் வச்சு அதிரடியாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்துத் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

​இந்த விவகாரத்தில் “சட்டம் எப்போதும் தன் கடமையைச் செய்யும்” என்று குறிப்பிட்டுள்ள ஜி.கே.வாசன், பொதுவாழ்வில் இருக்கும் பொறுப்புள்ள தலைவர்கள் எப்போதுமே பொறுப்போடும் மேடை நாகரீகத்தோடும் பேசுவதையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

​குறிப்பாக, பொது இடங்களில் பெண்கள் மற்றும் மகளிர் குறித்துப் பேசும்போது எந்த சூழ்நிலையிலும் அநாகரீகமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றும், அரசியல் விமர்சனங்கள் எல்லையைத் தாண்டக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். உதயநிதி ஸ்டாலினின் பேச்சு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்துள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து ஜி.கே.வாசன் தெரிவித்துள்ள இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.