மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் நடந்துள்ள ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது காட்டுத் தீ போல பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் உள்ள பகுதியில் நட் நடுரோட்டில் கணவர் ஒருவர் தனது மனைவியை பெல்ட்டால் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கப் பம்பரமாகச் சுழன்று அடித்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரல் வீடியோ குறித்த விவரங்களின்படி, அந்தப் பெண் மற்றொரு பேருடன் ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்ததை கவனித்த கணவர், ஆத்திரமடைந்து அவரை வழிமறித்துக் கேள்வி கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், பொதுமக்களின் நடுவே தனது மனைவியை அவர் பெல்ட்டால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்ததுடன், சிலர் தங்கள் செல்போன்களிலும் இந்தச் சம்பவத்தைப் பதிவு செய்துள்ளனர். பின்னர், வீடியோ எடுத்தவரே நேரடியாகச் சென்று கணவனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Whatsinthenews (@_whatsinthenews)

பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு எதிராக அரங்கேறியுள்ள இந்த வன்முறைச் செயல் மனிதநேயமற்றது என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த வைரல் வீடியோவில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் தகவல்கள் எதுவும் இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதுதொடர்பாக இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான காவல்துறை உறுதிப்படுத்தலோ அல்லது முறையான விசாரணையோ அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இதுபோன்ற பகீர் வீடியோக்கள் சட்டம்-ஒழுங்கு குறித்த பல கேள்விகளை எழுப்பினாலும், உண்மைத் தன்மையை முழுமையாக அறியாமல் எதையும் தீர்மானிக்க முடியாது என்றே கூறுகின்றனர். கணவன்-மனைவி இடையேயான மோதல் முற்றி பொதுவெளியில் கைநீட்டியுள்ள இந்தச் சம்பவம், இந்தூர் மக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.