லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி உச்சக்கட்ட பதற்றத்தில் போய்க்கொண்டிருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த வ ] நிலையில் அப்போது நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது இந்திய அணியின் பால்கனியில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும், இஷான் கிஷானும் அடுத்த கட்ட வியூகம் பற்றி மிகவும் சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்தனர். கேமரா அவர்கள் பக்கமாக திரும்பிய போதுதான் அந்த வேடிக்கை நடந்தது.
அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த விராட் கோலி, தான் பேட்டிங் செய்யப் போவதற்காகக் காத்துக்கொண்டிருந்தார். டென்ஷன் ஏதுமில்லாமல் செம கூலாக இருந்த கோலி, திடீரென கைகளை அசைத்து, இடமும் வலமுமாக குதித்து ஜாலியாக நடனமாடத் தொடங்கினார். அவரது காமெடியான முகபாவனைகளும், குறும்புத்தனமான டான்ஸும் கேமராவில் அப்படியே பதிவாகி, இப்போது சோசியல் மீடியாவில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
Ishan and gg are seriously talking meanwhile virat😭 pic.twitter.com/VVKSYfKkSr
— Lumi🥀 (@lumigonemad) July 19, 2026
இதற்கிடையே கேப்டன் அவுட் ஆனதும், ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்க கோலி கெத்தாக களம் இறங்கினார். மறுமுனையில் அசுர ஃபார்மில் சதம் அடித்து மிரட்டிக்கொண்டிருந்த ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். ‘ரோகித் சர்மாவுக்கு இதுதான் கடைசி ஒருநாள் போட்டி, அவர் ஓய்வு பெறப்போகிறார்’ என்று இணையத்தில் பரவிய வதந்திகளுக்கு பிசிசிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது. “ரோகித் இப்போதைக்கு ஓய்வு பெறமாட்டார்” என பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
