அமெரிக்காவின் மத்திய மேற்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, சுமார் 67 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ‘கஸ்’  என்று அழைக்கப்படும் டி. ரெக்ஸ் டைனோசரின் எலும்புக்கூடு, சுமார் 287 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.

உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட டி. ரெக்ஸ் எலும்புக்கூடுகளில், மிகவும் முழுமையான மற்றும் தெளிவான அமைப்பு கொண்டதாக இது கருதப்படுவதால், இதன் ஏல மதிப்பு இவ்வளவு உச்சத்தைத் தொட்டுள்ளதாகத் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டைனோசர்கள் வாழ்ந்த காலத்தின் வரலாற்றுச் சான்றாகக் கருதப்படும் இந்த அரிய எலும்புக்கூடு, ஏலச் சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனை கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வரலாற்றுப் பொருள், தற்போது உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களிடையே மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.