பீகார் மாநிலம் ககாரியா பகுதியில் நடந்த ஒரு விசித்திரமான ‘பகடௌவா விவாக்’ கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்தல் சம்பவம் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நிதிஷ் என்ற பி.ஏ மாணவர், தான் ஒரு பெண்ணின் தங்கையை காதலித்ததாகவும், ஆனால் தன்னை துப்பாக்கி முனையில் மிரட்டி, கடத்திச் சென்று அந்த பெண்ணின் மூத்த சகோதரிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

“>

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பாட் சிவில் நீதிமன்றத்தில் திருமணப் பதிவிற்காக நிதிஷை அழைத்துச் சென்றபோது வெளிச்சத்திற்கு வந்தது. அங்கு அவர் திருமணப் பத்திரத்தில் கையெழுத்திட மறுத்து கூச்சலிட்டதை அடுத்து, காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மறுபுறம், மணமகள் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். தங்களுக்கும் நிதிஷுக்கும் இடையே கடந்த இரண்டு மாதங்களாக காதல் உறவு இருந்ததாகவும், அவரது முழு சம்மதத்துடனேயே இந்த திருமணம் நடந்ததாகவும் மணமகள் தரப்பு வாதிடுகிறது.

இதனால் சினிமா திரைக்கதை போன்ற திருப்பங்கள் நிறைந்த இந்த வழக்கில், மணமகன் தனக்கு நேர்ந்த அச்சுறுத்தலால் இந்த திருமணம் நடந்ததாகக் கூற, மணமகள் தரப்போ இது பரஸ்பர காதலின் வெளிப்பாடு என்று கூறி வருகிறது. தற்போது இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் முரணான புகார்களை அளித்துள்ளதால், காவல்துறை இந்த கட்டாயத் திருமணப் புகாரின் உண்மைத் தன்மையைக் கண்டறிய தீவிர விசாரணை நடத்தி வருகிறது.