தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான ஆ.ராசா மீது பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் அதிரடியாகப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்து வரும் ராசாமணிகண்டன் என்பவர் இந்த அதிரடிப் புகாரை அளித்துள்ளார். கடந்த ஜூன் 25 அன்று திருவாரூரில் நடைபெற்ற ஒரு பொது விழாவில் கலந்துகொண்டு பேசிய எம்பி ஆ.ராசா, தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறான மற்றும் தரக்குறைவான கருத்துக்களைப் பரப்பியதாக அந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
.
முதல்வர் விஜய் பற்றி அவதூறாகப் பேசிய திமுக எம்பி ஆ.ராசா மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகார் மனுவில் மருத்துவர் ராசாமணிகண்டன் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற விழாவின் பேச்சுக்கு எதிராக, தற்போது எஸ்பி அலுவலகத்தில் அரசு மருத்துவர் ஒருவரே நேரடியாகப் புகாரளித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாகத் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அரசியல் ரீதியான விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
