உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள கரேலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திக்ரி கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு ஸ்மார்ட் பள்ளியில், தலைமை ஆசிரியர் ஒருவர் செய்த அநாகரிகமான செயல் சிசிடிவி கேமராவில் சிக்கி தற்பொழுது சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களைப் பெற்று வருகிறது.
அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான ரமேஷ் சந்திரா என்பவர், வகுப்பறையில் மாணவர்கள் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்த ஸ்மார்ட் டிவியில் போஜ்புரி மொழியிலான ஆபாசப் பாடலை மிக அதிக ஒலியில் ஒலிக்க விட்டுள்ளார். அதன் பின்னர் அந்த வகுப்பறை பெஞ்சிலேயே படுத்துக் கொண்டு அவர் நிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்திலும் மூழ்கியுள்ளார்.
जिस स्मार्ट क्लास में बच्चों के सपने सजने थे, वहां अश्लील गाने बज रहे हैं …
उत्तर प्रदेश के महोबा से सामने आए इस वीडियो ने शिक्षा व्यवस्था पर कई सवाल खड़े कर दिए हैं. आरोप है कि एक सरकारी स्कूल का प्रधानाध्यापक नशे की हालत में क्लासरूम में पड़ा रहा, जबकि बच्चों की पढ़ाई के लिए… pic.twitter.com/FVT6Byl7cs
— Kishor Joshi (@KishorJoshi02) July 10, 2026
பள்ளிக்கூடத்தை தனது சொந்தப் படுக்கையறையாக மாற்றி அவர் செய்த இந்த எல்லைமீறிய லீலைகள் அனைத்தும் வகுப்பறையில் இருந்த சிசிடிவி கேமராவில் அச்சுப்பிசகாமல் பதிவாகியுள்ளது.
இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் உடனடியாகப் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாகக் கல்வித் துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தலைமை ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் ரமேஷ் சந்திராவை பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.
