மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த அதிரடி கனமழை காரணமாக, அங்குள்ள ஒரு திருமண மண்டபம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக மாறியது.

மண்டபம் மற்றும் மணமேடை முழுவதும் தண்ணீர் தேங்கி, உறவினர்கள் அனைவரும் வெள்ளத்தில் நின்றுகொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டது. இருப்பினும், இந்த இயற்கை இடர்பாடுகளையும் மீறி, அங்கு நடக்கவிருந்த திருமணச் சடங்குகள் எவ்வித தடையுமின்றி மிகவும் கலகலப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அரங்கேறின.

இந்த அசாதாரண சூழ்நிலையிலும் மணமக்கள் தங்களது திருமண நாளை முழுமையாக ரசித்துக் கொண்டாடிய ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.

பட்டு ஆடைகளுடன் தயாராக இருந்த மணமகளை, அங்கு தேங்கியிருந்த வெள்ள நீரில் நடக்க விடாமல், மணமகன் தனது கைகளில் ‘பாகுபலி’ பாணியில் தூக்கிக்கொண்டு உணவருந்தும் பகுதிக்கு நடந்து செல்கிறார்.

மேலும், இடையில் விளையாட்டாக அவளைத் தண்ணீரில் கீழே போடுவது போலப் பாவனை செய்து சிரிக்க வைக்கும் அந்த காதல் காட்சிகள் நெட்டிசன்கள் பலரையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது.