தமிழக அரசியல் ஏரியாவில் தற்பொழுது பெரும் புயலையும் காரசார விவாதத்தையுமே கிளப்பியுள்ள ஒரு விசித்திரமான சம்பவம் அரசு விழாவில் அரங்கேறியுள்ளது. மாண்புமிகு அமைச்சர் பர்வேஸ் அவர்கள் பங்கேற்ற புதிய அரசு பேருந்து சேவை துவக்க விழாவில், திறப்பு விழாவிற்காகக் கட்டப்பட்டிருந்த ரிப்பன் திடீரென தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடி வண்ணத்தில் இருந்ததைக் கண்டு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அருணா, ஆளுங்கட்சி திமுக எம்.எல்.ஏ முத்துராஜா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ஒட்டுமொத்தமாக அதிர்ச்சியும் பெரும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

மேடையில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து, உடனடியாக அந்தத் தவெக கட்சி வண்ணத்தில் இருந்த ரிப்பன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, வேறு சாதாரண ரிப்பன் மாற்றப்பட்ட பின்னரே அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இருப்பினும், இதற்கு முன்னதாகவே காலையில் தொடங்கி வைக்கப்பட்ட மற்றொரு புதிய பேருந்தில் தவெக கொடி வண்ணத்திலேயே தான் அந்த ரிப்பன் கட்டப்பட்டிருந்தது என்ற சுவாரசியமான தகவலும் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

தற்பொழுது இந்த  செய்தி சோசியல் மீடியா பக்கங்களில் மிக வேகமாகப் பரவி, “அரசு விழாவில் தவெக கொடி கலர்ல ரிப்பன் கட்டினது அதிகாரிகளோட தப்பா இல்ல தளபதி ரசிகர்களோட மாஸ் ஸ்கெட்ச்சா ?! என்ன இருந்தாலும் இந்த நியூஸ் இப்போ இணையத்துல செம ட்ரெண்டாகி வருது!” என்று நெட்டிசன்கள் மத்தியில் பல்வேறு காரசாரமான கமெண்ட்டுகளுடன் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.