இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றான மும்பையில், நள்ளிரவு நேரத்திலும் பெண்கள் தனியாகப் பயமின்றி நடமாட முடியும் என்பது உலகறிந்த விஷயம். ஆனால், அப்படிப்பட்ட வீர மங்கைகளையே ஒரு சிறிய கரப்பான் பூச்சி நடுங்க வைத்து, ரயிலுக்குள் ஓட ஓட விரட்டிய சுவாரசியமான சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது. மும்பை லோக்கல் ரயிலின் பெண்கள் பொதுப் பெட்டிக்குள் திடீரென நுழைந்த கரப்பான் பூச்சி ஒன்றைக் கண்டு, அங்கிருந்த பெண்கள் அனைவரும் பயத்தில் அலறியடித்துள்ளனர். ஒரே ஒரு தட்டு தட்டினால் இறந்துவிடக்கூடிய அந்தப் பூச்சிக்கு பயந்து, அது தங்கள் மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பல பெண்கள் தங்களது இருக்கைகளின் மீது ஏறி நின்று கொண்டு கூச்சலிட்ட காட்சி பார்ப்போரை சிரிக்க வைத்துள்ளது.
https://www.instagram.com/reel/DaRaQroMyvK/?utm_source=ig_embed&ig_rid=Amj63ZVznx3QpHZRzmuQL6n
‘singeryogesh.official’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வெளியாகி தற்போது வரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “மும்பையில் எப்போது என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது” என்றும், “பாசத்திற்குரிய சகோதரிகள் கரப்பான் பூச்சிக்கு பயந்துவிட்டார்கள்” என்றும் பலவிதமான நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முன்பும் இதேபோல் மும்பை பெண்கள் ரயிலுக்குள் ஒரு பல்லி புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
