அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர் தோல்வியைத் தொடர்ந்து, இங்கிலாந்து மண்ணில் இந்திய டி20 அணியின் சில வீரர்களின் மோசமான ஃபார்ம் அணி நிர்வாகத்திற்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், ஐந்து போட்டிகளில் சொதப்பிவிட்டு ஒரு போட்டியில் மட்டும் ஜொலிக்கும் வீரர்களால், உள்நாட்டில் காத்துக்கொண்டிருக்கும் இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்க முடியாத சூழல் நிலவுகிறது.
குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் சோபிக்கத் தவறியதால், அவரது எதிர்காலம் அடுத்த தொடரைத் தீர்மானிக்கவுள்ளது. மிடில் ஆர்டரில் திலக் வர்மாவின் ரன் குவிக்கும் வேகம் ஸ்ட்ரைக் ரேட் கவலையளிக்கும் வகையில் மந்தமாக உள்ளது.
மறுபுறம், பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களை வாரி வழங்குவதால், அவருக்கான டி20 கதவுகள் பகுதியளவு மூடப்பட்டுள்ளன. இதனால் இவர்களை அணியில் இருந்து நீக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில், இலங்கை அணிக்கு எதிராக 13 நாட்களில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட புதிய அட்டவணையை இந்திய கிரிக்கெட்வாரியம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
