சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், மழையின் காரணமாக முற்றிலும் ஈரமாகி, மிகவும் வழுக்கலாக இருந்த கல் படிகளில் குட்டி ஆமை ஒன்று விடாமுயற்சியுடன் ஏறி சாதிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான மக்களுக்கு வாழ உத்வேகம் அளித்து வருகிறது.
உருவத்தில் மிகவும் சிறியதான அந்த ஆமை, வழுக்கல் படி மீது ஒரு அடி எடுத்து வைக்க முயன்ற போது, மீண்டும் மீண்டும் வழுக்கி கீழே விழுந்து கொண்டே இருந்தது; தொடர் தோல்விகள் ஏற்பட்டபோதிலும் மனம் தளராமல், புது உத்வேகத்துடன் அது மீண்டும் மீண்டும் மேலே ஏற முயன்றுகொண்டே இருந்தது; பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, அந்த ஆமை இறுதியாக வெற்றிகரமாக மேல் படியை அடைந்த போது, சுற்றியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அதன் வெற்றியைப் கொண்டாடினர்.
View this post on Instagram
“>
“வாழ்க்கையில் உங்கள் வேகத்தை விட, உங்கள் நிலைத்தன்மை எவ்வளவு முக்கியம் என்பதை இந்தச் சிறிய உயிரினம் காட்டியுள்ளது” என்று இணையவாசிகள் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
