டி-20 உலகக் கோப்பையை வென்று கம்பீரமாக வலம் வந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, அயர்லாந்துக்கு எதிரான டி-20 தொடரில் மிக மோசமான மற்றும் அதிர்ச்சிகரமான தோல்வி கிடைத்துள்ளது. அயர்லாந்து அணி 2-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி முதன்முறையாக வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலக சாம்பியனான இந்திய அணி அயர்லாந்து மண்ணில் இப்படிBlank கையாக திரும்புவது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியின் போது இந்திய இளம் வீரர் திலக் வர்மா மற்றும் அயர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸ் ஆகியோருக்கு இடையே மைதானத்தில் ஏற்பட்ட கடுமையான மோதல் தற்போது சோஷியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
இந்திய அணிக்கு ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான நேரத்தில், அயர்லாந்து கேப்டன் ஸ்பின்னர்களை களமிறக்கினார். அப்போது பந்து வீச வந்த மேத்யூ ஹம்ப்ரிஸ், ஸ்ட்ரைக்கில் இருந்த திலக் வர்மாவின் பேட்டிங் கவனத்தை சிதறடிப்பதற்காக வேண்டுமென்றே பந்து வீச தாமதப்படுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த திலக் வர்மா, அடுத்த பந்தில் பவுலர் ஓடி வரும்போது பின்வாங்கி “நீ வீசினால் நான் விளையாட மாட்டேன்” என்பது போல பதிலடி கொடுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மைதானத்தில் பரபரப்பு நிலவியதால், அம்பயர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய, அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 10 ரன்னில் அவுட் ஆக, இந்தியா 3 ஓவரில் 19 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் திலக் வர்மா அதிரடியாக விளையாடி 55 ரன்கள் குவித்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்ல போராடினார். ஆனால் கடைசி ஓவரில் ஹர்ஷித் ராணா அவுட் ஆக, கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தும் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே எடுத்து, வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வரலாற்று தோல்வியைத் தழுவியது.
