தவெக தலைவர் விஜய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாகியுள்ள திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு ஆளும் தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக தரப்பில் வேட்பாளர்களைக் களம் இறக்குவதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

தவெக கூட்டணியில் இத்தொகுதியைப் பெறுவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனுக்கும், அண்மையில் அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த முன்னாள் மூத்த நிர்வாகிகளுக்கும் இடையே தீவிர முட்டிமோதல் நிலவி வருகிறது.

அதேநேரம், இழந்த கோட்டையை மீண்டும் கைப்பற்றத் துடிக்கும் திமுகவில், அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியிடுவதைத் தடுத்து, கட்சியின் முக்கியத் தூணான கே.என்.நேரு தனது அரசியல் நகர்வாகத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினையே நேரடியாகக் களம் இறக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படும் அம்பாசமுத்திரம் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய விஐபி தொகுதிகளால் தமிழக இடைத்தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.