தமிழகத்தில் உரிய அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக சிட் ஃபண்ட்ஸ் (சீட்டு நிறுவனங்கள்) நடத்தினால் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். சீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் ஏதேனும் முறைகேடுகளைச் சந்தித்தால், அதுகுறித்து அரசுக்கு முறையாகப் புகார் அளிக்க வேண்டும் என்றும், அப்படி வரும் புகார்கள் மீது கண்டிப்பாக இந்த அரசு உடனே நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

​மேலும், பொதுமக்கள் ஏமாறுவதைத் தடுக்கவும், தவறு செய்பவர்களை ஒடுக்கவும் முதல்வர் ஸ்டாலின் மிக உறுதியாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் எந்தவொரு துறையாக இருந்தாலும் சரி, அங்கு என்ன தவறு நடந்தாலும் சம்மந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அதிரடி வார்னிங், கந்துவட்டி மற்றும் போலி சீட்டு கம்பெனி நடத்துவோர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.