மதுபோதையில் எல்லை மீறி நடந்துகொண்ட நபருக்கு தந்தை ஒருவர் உடனடியாகக் கொடுத்த பதிலடி தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சி ஒன்று தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கணவன் மற்றும் மனைவி தங்களது குழந்தையுடன் நின்றுகொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் ஒரு குடிகார நபர், பெற்றோரின் அனுமதி எதையும் பெறாமல், கையில் இருக்கும் குழந்தைக்கு திடீரென முத்தம் கொடுக்க முயல்கிறான். அவன் கடுமையான மதுபோதையில் இருந்ததாலும், அவனிடமிருந்து வந்த மோசமான மது நெடி காரணமாகவும், அதிர்ச்சியடைந்த அந்தத் தந்தை குழந்தையைப் பாதுகாக்கும் நோக்கில் அந்த நபரை கையை வைத்து விலகிப் போகுமாறு எச்சரித்துத் தள்ளுகிறார்.
<blockquote class=”twitter-tweet” data-media-max-width=”560″><p lang=”en” dir=”ltr”>Drunk idiot kisses a couple’s baby in the bar… Baby’s dad ends it with ONE PUNCH 💥😤 <a href=”https://t.co/ZoVgMFaSlN”>pic.twitter.com/ZoVgMFaSlN</a></p>— Twizeさん (@twize56655) <a href=”https://x.com/twize56655/status/2070720550163337468?ref_src=twsrc%5Etfw”>June 27, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
ஆனால், அந்த எச்சரிக்கையையும் மீறி அந்த நபர் மீண்டும் குழந்தையை நோக்கி ஆக்ரோஷமாக நெருங்கி வர முயல்கிறான். ஆபத்தை உணர்ந்த தந்தை, நொடிப் பொழுதில் குழந்தையைத் தன் மனைவியிடம் பத்திரமாக ஒப்படைத்துவிட்டு அந்த நபரைத் தடுக்க முற்படுகிறார். அப்போது அந்த ஆசாமி தாக்குதலில் ஈடுபடுவது போல பாய்ந்து வர, ஆத்திரமடைந்த தந்தை தன் குடும்பத்தைக் காப்பதற்காக அவனை நோக்கி ஒரே ஒரு ‘புஷ்’ (Push) செய்து பலமாகத் தள்ளுகிறார். அந்த வேகத்தில் நிலைதடுமாறிய குடிகாரன் பறந்து போய் தரையில் விழுகிறான். குடும்பத்தின் பாதுகாப்பிற்காக அந்தத் தந்தை காட்டிய துணிச்சலையும், உடனடியாக எடுத்த அதிரடி முடிவையும் பாராட்டி நெட்டிசன்கள் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் தீயாய் பகிர்ந்து வருகின்றனர்.
