தமிழக சட்டசபையில் நேற்று அரங்கேறிய ஒரு பரபரப்பு சம்பவம், தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டசபையில் பேசிக்கொண்டிருந்த போது, “பார்ட்டி ஃபண்ட்” (கட்சி நிதி) குறித்து அதிரடியான சில கருத்துக்களை முன்வைக்கத் தொடங்கினார். ஆனால், விஜய் இந்த வார்த்தையைச் சொன்ன அடுத்த கணமே, எதிர்க்கட்சியான திமுகவினர் அனைவரும் சபையிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்து ஓட்டம் பிடித்தனர்.
விஜய் எழுப்பிய பார்ட்டி ஃபண்ட் விவகாரத்திற்குப் பதில் சொல்ல முடியாமல் திமுகவினர் பயந்து ஓடிவிட்டதாக இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) எக்ஸ் (X) வலைதளத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பழைய மாஸான காணொளி ஒன்றை மிக வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.
காலம் காலமா ஓடிட்டே தான இருக்கீங்களேடா நீங்க 😂🤡
அன்று கச்சதீவு ✅✅
இன்று Party Fund ✅✅ pic.twitter.com/u4Vzs3mgGe— TVK Sqυα∂💥 (@TVKVijay24x7) June 23, 2026
அந்தப் பழைய வீடியோவில் ஜெயலலிதா அவர்கள், “சட்டசபையில் கச்சத்தீவு, பூரண மதுவிலக்கு என்று சொன்னாலே எதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்து ஓடிவிடும்” என்று காரசாரமாகக் குறிப்பிட்டிருப்பார். அன்று ஜெயலலிதா சொன்ன “கச்சத்தீவு” பாணியில், இன்று விஜய் சொன்ன “பார்ட்டி ஃபண்ட்” வார்த்தையைக் கேட்ட உடனே திமுகவினர் பதறியடித்து ஓடிவிட்டதாக, அந்தப் பழைய வீடியோவோடு ஒப்பிட்டு திமுகவை தவெகவினர் சமூக வலைதளங்களில் மரண மாஸாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
