புதுடெல்லி ஜந்தர் மந்தரில் சனிக்கிழமை அன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, காக்கரோச் ஜனதா கட்சி (CJP) நடத்திய பிரம்மாண்ட போராட்ட களத்தில் அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி மக்களின் இதயங்களை வென்று வருகிறது.
மாலை 5 மணி வரை மட்டுமே போராட்டத்திற்கு அனுமதி இருந்தபோதிலும், சிஜேபி ஆதரவாளர்கள் விதியை மீறி இரவிலும் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அப்போது அங்கிருந்த டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவர், போராட்டம் நடத்திய ஒரு இளைஞரின் காதில் குனிந்து ஏதோ ஒரு ரகசியத்தை ரகசியமாக ஓத, அதைக்கேட்ட அடுத்த கணமே அங்கிருந்த போராட்டக்காரர்கள் அனைவரும் “டெல்லி போலீஸ், ஐ லவ் யூ” என்று உணர்ச்சிப்பொங்க முழக்கமிட்டது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
View this post on Instagram
இன்ஸ்டாகிராமில் @singh_priyyanshi என்ற கணக்கில் வெளியான இந்த வீடியோவின் கமெண்ட் செக்ஷனில், “நாமும் மக்கள் பக்கம்தான், ஆனால் எங்கள் கடமையை செய்ய வேண்டும் என்று அதிகாரி சொல்லியிருப்பார்” என நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களைக் குவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, நேற்று இரவு ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் மின்சாரத்தை துண்டித்த டெல்லி போலீஸார், உணவு மற்றும் கழிவறை வசதிகளையும் தடுத்துள்ளதாக சிஜேபி குற்றம் சாட்டியுள்ளது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான இன்று பேசிய அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, தேர்வுக் குளறுபடிகளால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் நீதிக்காகவே நாங்கள் போராடுகிறோம், தவறு செய்யவில்லை; எனவே ஜந்தர் மந்தருக்கு வரும் மக்களை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும், நேற்று இரவு முதல் கழிவறைகளில் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதை அதிகாரிகள் உடனே சீரமைக்க வேண்டும் என்றும் எக்ஸ் (X) தளத்தில் உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
