தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பமாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மொத்த உறுப்பினர் சேர்க்கை 2 கோடி என்ற இமாலய இலக்கைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்ட தவெக, யாரும் எதிர்பாராத விதமாக 34.92 சதவீத வாக்குகளை வாரிக் குவித்து பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்குப் பலத்த அதிர்ச்சியளித்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெகவை நோக்கித் தொடர்ச்சியாகப் படையெடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாகக் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை தற்போது 2 கோடியைக் கடந்துள்ள நிலையில், தென்னிந்திய அரசியல் வரலாற்றிலேயே தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதல் அரசியல் கட்சி என்ற பிரம்மாண்ட பெருமையை தமிழக வெற்றிக் கழகம் தட்டிப் பறித்துள்ளது.
