தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கும், திமுக-விற்கும் இடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டு பேரவையையே அதிரவைத்துள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய திமுக-வின் சிவசங்கர், “நீங்கள் தனியாக நின்று வெற்றி பெற்றது சரிதான்..! ஆனால் வரும் காலங்களிலும் தனியாகவே நிற்பீர்களா..? அதை நீங்கள் சொல்லத்தயாரா..?” என்று தவெக-விற்குப் பகிரங்கமாகச் சவால் விடுத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் உடனடியாக எழுந்து நின்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், திமுக தரப்பிற்கு மரண மாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் பேசுகையில், “தமிழக வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று சொன்னதில்லை; ஆனால், நாங்கள் எங்கள் முதல் மாநாட்டில் சொன்னதை இந்த நேரத்தில் கம்பீரமாகச் செய்து காட்டியிருக்கிறோம்” என்று அதிரடியாகக் கூறினார். மேலும், “மக்கள் வழங்கிய தீர்ப்பை எப்போதும் யாரும் எந்த காரணத்திற்காகவும் சிறுமைப்படுத்திப் பேசக்கூடாது; தனி ஒரு கட்சியாக இந்த சட்டமன்றத்திலே மற்ற தோழமை கட்சிகளை விட, மற்ற அரசியல் கட்சிகளை விட மிக மிகப்பெரிய வாக்கு எண்ணிக்கையை மக்கள் வாரி வழங்கி, தமிழக வெற்றி கழகம் இன்றைய தினம் இந்த ஆட்சியை அமைத்திருக்கிறது.
நீங்கள் தனியாக நின்று வெற்றி பெற்றது சரிதான்..! ஆனால் வரும் காலங்களிலும் தனியாகவே நிற்பீர்களா..? அதை நீங்கள் சொல்லத்தயாரா..? சவால் விட்ட தி.மு.கவின் சிவசங்கர்.. எழுந்து நின்று பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்..#Chennai | #TNAssembly | #DMK | #TVK | #Sivashankar | #RajMohan |… pic.twitter.com/RAMsQpwLtk
— Polimer News (@polimernews) June 19, 2026
எனவே எங்களுக்கு எதிராகப் பேசுவதாக நினைத்து, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக யாரும் பேசுவதைப் பேரவைத் தலைவர் அனுமதிக்கக்கூடாது” என்று மிக ஸ்ட்ராங்காகத் தனது தரப்பு நியாயத்தை முன்வைத்தார். இந்த அனல் பறக்கும் விவாத வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
