“15 வயசுப் பையன்கிறதால வைபவ் சூர்யவன்ஷியைப் பத்தி மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்த இலங்கை வீரர் ரொம்பத் தப்பாப் பேசியிருக்கார் !” என்று கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையேயான முத்தரப்புத் தொடர் போட்டியின் போது இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் மைதானத்தில் அநாகரிகமாக மோதலில் ஈடுபட்ட இலங்கை ஆல்-ரவுண்டர் விஷன் ஹலம்பேஜுக்கு போட்டி நடுவர் அதிரடியாக அபராதம் விதித்துத் தண்டித்துள்ளார்.

இந்தியா ‘ஏ’ அணி தோல்வியடைந்த பிறகு, 21 வயதான விஷன் ஹலம்பேஜ் 15 வயதே ஆன இந்திய இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷியின் மிக அருகில் சென்று தனிப்பட்ட முறையில் வம்புக்கு இழுத்ததால், கோபமடைந்த வைபவ் அவரைப் பிடித்துத் தள்ளியுள்ளார்;

இதனால் இரு வீரர்களுக்கும் இடையே மைதானத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிலைமை மோசமடைந்தது. இந்த மோதல் சம்பவத்தில் ஒட்டுமொத்தக் குற்றவாளியும் இலங்கை வீரர் ஹலம்பேஜ் தான் என்பது போட்டி நடுவரின் விசாரணையில் அக்குவேறானிவேறாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதே போட்டியில் மற்றொரு விசித்திர சம்பவத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட இலங்கையின் மூத்த விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவுக்கும் போட்டி நடுவர் அபராதம் விதித்துள்ளார்;

ஆனால், அவர் இந்த சண்டையின் போது வைபவ் சூர்யவன்ஷியைச் சமாதானப்படுத்த முயன்றதால் இந்த மோதல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த மோதலில் ஆக்ரோஷமாகத் தள்ளிய இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மீது பிசிசிஐ (BCCI) ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய வேளையில், இந்த விவகாரத்தில் பிசிசிஐ நேரடியாகத் தலையிட்டுள்ளது.

“>

இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா, “இந்திய சீனியர் அணியில் இடம் பிடிக்கக் கூடிய திறமையான வளர்ந்து வரும் இளம் வீரர்கள் எல்லாரும் இந்த ஆட்டத்துல விளையாடுறாங்க, அதனால அவங்க மத்த தேவையில்லாத சண்டை சச்சரவுகள்ல கவனத்தைச் சிதறவிடாம தங்களோட ஆட்டத்துல மட்டும் தான் முழு கவனம் செலுத்தணும் சார்!” என்று இந்திய வீரர்களுக்குக் கடுமையான அறிவுரைகளை வழங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.