“விஜய்க்கு இருக்கிற செல்வாக்கை நாங்க அப்பவே சொன்னோம் சார், ஆனா மாவட்ட செயலாளர்கள் தான் எங்களை மதிக்கல!” என்று திமுக கள ஆய்வு குழுவினர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை அறிவாலய வட்டாரங்களில் அணுகுண்டாய் வெடித்துள்ளது.
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய அமைக்கப்பட்ட திமுகவின் உயர்மட்டக் குழு, தனது அதிரடி காரசார அறிக்கையை ஸ்டாலினிடம் ஒப்படைத்துள்ளது.
அந்த அறிக்கையில், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தகுதியான அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை தராததால் பெண்கள் மத்தியில் அரசு மீது கடும் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாகப் பெண் வாக்காளர்களிடையே தவெக தலைவர் விஜய்க்கு இருந்த அசுரத்தனமான செல்வாக்கை உள்ளூர் நிர்வாகிகள் முற்றிலும் கோட்டை விட்டுவிட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மக்கள் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல முடியாதபடி அவர்களது உதவியாளர்கள் (PA) போட்ட முட்டுக்கட்டைகள், கூட்டுறவு மற்றும் ஆவின் தேர்தல் நடத்தாததால் உடன்பிறப்புகள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் கோவில் அறங்காவலர் குழு நியமனங்களில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்பட்டு உண்மையான திமுகவினர் புறக்கணிக்கப்பட்டது போன்ற பகீர் குற்றச்சாட்டுகள் அம்பலமாகியுள்ளதால், தோல்வி அதிர்ச்சியில் இருக்கும் ஸ்டாலினுக்கு இந்த அறிக்கை மேலும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
