“சீருடை போட்டவங்க நடத்துற பயங்கரவாதம் இது!” என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் எழுப்பியுள்ள மரண ஓலம், சர்வதேச சமூகத்தையே அதிர வைத்துள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் (PoK) ராவலகோட் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில், மலிவு விலையில் மாவு, அரிசி, மின்சாரம் மற்றும் தங்களது அடிப்படை உரிமைகளைக் கேட்டு சுமார் 70,000 ஆயுதமற்ற சாதாரண பொதுமக்கள் அமைதியான முறையில் ஒன்று கூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீரின் நேரடிக் கட்டளையின் பேரில், அங்கு புகுந்த பாகிஸ்தான் ராணுவத்தினரும் ரேஞ்சர்ஸ் படையினரும் காஷ்மீர் மக்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியதோடு, ஏகே-47 ரக துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக கொடூரமான முறையில் சுட்டுத் தள்ளினர்.
இந்த கோரமான துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 16 அப்பாவி மக்கள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொல்லப்பட்டனர் மற்றும் 37-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Rawalakot in PoJK witnessed a horrific crackdown after Pakistani Army personnel & Rangers opened fire on 60,000-70,000 unarmed protesters gathered at Eidgah Ground. Citizens demanding affordable flour, rice, electricity & basic rights came under indiscriminate gunfire. pic.twitter.com/CE2vUq8gRk
— Songs of Chinar (@SongsOfChinar) June 11, 2026
“>
இந்த துயரத்திற்கு மத்தியிலும், “எங்களை பாகிஸ்தான் ‘பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தினாலும் எங்கள் உரிமைகளுக்கான போராட்டம் ஓயாது” என அரசியல் ஆர்வலர் சர்தார் அமன் கான் வீர முழக்கமிட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறலை மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கடுமையாகக் கண்டித்துள்ளது.
