தமிழ் சினிமாவின் இமயமும் மண்வாசனை இயக்குனருமான பாரதிராஜா, தனது பழைய நேர்காணல் ஒன்றில் நடிகர் விஜய் குறித்துப் பகிர்ந்துள்ள ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் தளபதி ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. அந்தப் பேட்டியில், நடிகர் விஜய்யின் ஆரம்பகால சினிமா பயணம் குறித்துப் பேசிய பாரதிராஜா, “ஒருமுறை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகன் விஜய்யை என்னிடம் அழைத்து வந்து, இவனை வைத்து ஒரு படம் பண்ண முடியுமா என்று கேட்டார்;
அப்போது விஜய்யின் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, இவனெல்லாம் ஒரு ஹீரோவா.. கண்ணுல ஒரு பொலிவு இல்லை என்று கூறி நான் அவரை அசிங்கமாக நிராகரித்து (Reject) அனுப்பிவிட்டேன்” என்று மிகவும் வெளிப்படையாகத் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் பேசிய அவர், அன்று தம்மால் மிகச் சாதாரணமாக நிராகரிக்கப்பட்ட அதே விஜய் தான், இன்று ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் வசூலிலும் சரி, மக்கள் செல்வாக்கிலும் சரி யாரும் நெருங்க முடியாத ‘நம்பர் 1’ நாற்காலியில் அமர்ந்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை நினைக்கும் போது, அன்று தனது கணிப்பு எவ்வளவு தவறானது என்பதைத் தான் உணர்வதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாபெரும் இயக்குனர், தான் செய்த பழைய தவறை எவ்வித ஈகோவும் இல்லாமல் மேடையில் ஒப்புக்கொண்ட இந்த வீடியோ, தற்போது பாரதிராஜாவின் மறைவுக்குப் பின் மீண்டும் இணையத்தில் உலா வந்து வைரலாகி வருகிறது.
