ஐபிஎல் 2026 தொடரில் எல்.எஸ்.ஜி (LSG) அணி தன்னைச் சரியாகப் பயன்படுத்தாமல் பெஞ்சில் உட்கார வைத்துப் புறக்கணித்ததற்கு, ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது ஆல்-ரவுண்டர் ஆட்டத்தின் மூலம் நச்சுனு பதிலடி கொடுத்துள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற டி20 மும்பை லீக் போட்டியில், பாந்த்ரா பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக ஏஆர்சிஎஸ் அந்தேரி அணிக்காகக் களம் இறங்கிய 26 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் சிங்கிள் ஆளாக நின்று ஆட்டத்தையே தலைகீழாக மாற்றியுள்ளார்.
முதலில் பந்துவீச்சில் அனல் பறக்கவிட்ட அர்ஜுன், வெறும் 3 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளி எதிரணியைச் சுருட்டினார். பின்னர் 145 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்ய வந்தபோது, 3-ஆவது இடத்தில் இறங்கி 34 பந்துகளில் 194.12 ஸ்டிரைக் ரேட்டில் 66 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார்.
Meet Arjun Tendulkar, the son of the great Sachin Tendulkar. He could easily live on his dad’s money. But he chose hard work and dedication towards cricket.
He smashed 60+ with the bat and 3/11 in 3 overs in bowling today in the Mumbai league. Mad Respect 🫡❤️ pic.twitter.com/3dxy4KR1pm
— HK (@potter_here18) June 8, 2026
“>
இவருடன் சேர்ந்து முஷிர் கானும் 54 ரன்கள் எடுத்துப் பார்ட்னர்ஷிப் போட, அந்தேரி அணி 13.5 ஓவர்களிலேயே 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
‘என்னை ஓரங்கட்டுனா நான் இப்படித்தான் கம்பேக் கொடுப்பேன்’ என அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டாலும் பந்தாலும் காட்டியுள்ள இந்த ருத்ரதாண்டவம் சோஷியல் மீடியாவில் தற்பொழுது காட்டுத்தீயாய் பரவி வருகிறது பாஸ்!”
