அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கொத்துக் கொத்தாகத் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து, ‘அதிமுகவினர் தவெகவில் இணைய ஈபிஎஸ் தான் காரணம்’ என்றும், ‘பேப்பரில் மட்டும்தான் இபிஎஸ் பொதுச்செயலாளர்’ என்றும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய அதிரடி பேச்சுக்கு, அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தற்பொழுது மிகக் கடுமையான முறையில் கண்டன தெரிவித்துள்ளார்.

‘அரசியல் எதிரிகளை இப்படித் தொடர்ந்து கொச்சைப்படுத்திப் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை’ என விரலை நீட்டி ஆக்ரோஷமாக எச்சரித்துள்ளார்.

தவெக 108 இடங்களைப் பிடித்து ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள போதிலும், தங்களை வம்புக்கு இழுத்தால் சும்மா விடமாட்டோம் என கே.பி.முனுசாமி எடப்பாடி கூடாரத்திலிருந்து கொடுத்த இந்த  பதிலடி, தற்பொழுது  தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.