தவெக கட்சியின் முக்கிய முகமும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா, அதிமுக கோட்டையையே அடியோடு பிய்த்து எறியும் வகையில் வெளியிட்டுள்ள அதிரடி கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை  கிளப்பியுள்ளது.

‘தவெக என்பது மாற்று கட்சி அல்ல, அதுதான் உண்மையான தாய் கட்சி; மற்ற கட்சிகளில் இருப்பது போல தவெகவில் எந்தவித அதிகார போட்டியும் கிடையாது’ என அதிரடியாகப் பேசியுள்ளார்.

மேலும், ‘அதிமுகவின் வாக்குகளைப் பெறாமல் தவெக இந்த அசுர வெற்றியைப் பெற்றிருக்கவே முடியாது; அதிமுகவினர் தவெகவில் பெருமளவில் இணைய எடப்பாடி பழனிசாமி (EPS) தான் முழு காரணம்’ என்று குற்றம் சாட்டியுள்ள அவர், ‘விரைவில் 90 சதவீத அதிமுகவினர் மொத்தமாகத் தவெகவில் இணைவார்கள்’ என ஓப்பனாகவே சவால் விட்டுள்ளார்.

108 தொகுதிகளில் வென்று தவெக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், பிரதான  அதிமுகவை அடியோடு காலி செய்ய ஆதவ் அர்ஜுனா போட்டுள்ள இந்த  ஸ்கெட்ச், எடப்பாடி கூடாரத்தை ஒட்டுமொத்தமாக உலுக்கியெடுத்துள்ளது.”