டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவை அதிரடியாகக் கழட்டிவிட்டு, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ நியமித்துள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா உலகக் கோப்பையை வென்றிருந்தாலும், அவரது சமீபத்திய ஃபார்ம் அவுட் மற்றும் எதிர்கால அணியை உருவாக்கும் தேர்வுக்குழுவின் திட்டம் காரணமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் பேட்டிங்கிலும், கேப்டன்சியிலும் மாஸ் காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர், வரவிருக்கும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்கள் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார்.
இந்திய அணி முதலில் அயர்லாந்துடன் 2 டி20 போட்டிகளிலும், பின்னர் இங்கிலாந்துடன் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.
<a href=”http://
Presenting #TeamIndia‘s newest T20I captain 🇮🇳
Congratulations to Shreyas Iyer as he takes the helm in the shortest format of the game 👏@ShreyasIyer15 pic.twitter.com/frfAXAOkTA
— BCCI (@BCCI) June 6, 2026
“>
புதிய கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்கு, தனது அதிரடி ஆட்டத்தையும் தனித்துவமான கேப்டன்சி ஸ்டைலையும் உலகிற்கு நிரூபிக்க இந்த வெள்ளைப்பந்து தொடர்கள் மிக முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
சூர்யகுமாரின் கேப்டன்சி காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வையும் இப்போது புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பக்கம் திரும்பியுள்ளது.
