“அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு பெரிய நிம்மதி.! வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கை அதிரடியாகத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே இதே போன்ற விவகாரங்களில் நீதிமன்றம் விரிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால், இந்த புதிய வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று வருமான வரித்துறை சார்பில் முறையான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான இந்த சொத்து விவகார வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. அரசியல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், அதிமுக பொதுச்செயலாளருக்கு சாதகமாக வந்துள்ள இந்த தீர்ப்பு, அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் குஷியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.”
