இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் விராட் கோலியை, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுடன் ஒப்பிட்டு “பாபர் அசாம் தான் உண்மையான ராஜா” என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது பேசியுள்ள அதிரடிப் பேச்சு, இப்போ சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் எதிர்ப்புகள் கிளப்பியுள்ளது.
ஜூன் 2 அன்று சமூக வலைத்தளங்களில் வைரலான ஒரு வீடியோவில் பேசியுள்ள தன்வீர் அகமது, 2026 ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் சாதனைகளை விட பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (PSL) பாபரின் ஆட்டத்திறனே மாஸாக இருந்தது என்று வாதாடியுள்ளார்.
மேலும், கோலி டி20 சர்வதேசப் போட்டிகளிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டதால், இன்னும் விளையாடிக் கொண்டிருக்கும் பாபர் அசாம் எதிர்காலத்தில் கோலியின் அனைத்து டி20 சாதனைகளையும் தவிடுபொடியாக்கி விடுவார் என்றும், புள்ளிவிவரங்களின்படி பாபரே முன்னிலையில் இருக்கிறார் என்றும் அதிரடி குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார்.
🚨 Tanveer Ahmed compares Babar Azam’s PSL and Virat Kohli’s IPL stats and claims that Babar Azam has more runs and more centuries in T20 Cricket than Virat Kohli,Virat is retired while Babar is still playing and will break all the records. #PakistanCricket #PAKvsAUS pic.twitter.com/oUH5MEkIwk
— Tehseen Qasim (@Tehseenqasim) June 1, 2026
“>
தன்வீர் அகமதுவின் இந்த பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இருந்து இப்போ படுபயங்கரமான எதிர்ப்புகளும், அனல் பறக்கும் பதிலடிகளும் குவிந்து வருகின்றன. “முக்கியமான போட்டிகளில் இந்தியாவை ஜெயிக்க வைத்த விராட் கோலி எங்கே, 4 டி20 உலகக் கோப்பைகளில் விளையாடியும் ஒரு பெரிய தொடரைக் கூட வெல்ல முடியாத பாபர் அசாம் எங்கே?!
பாகிஸ்தானின் முன்னாள் வீரர்களுக்கு விராட் கோலி மற்றும் சூர்யவன்ஷி பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துவதே வேலையாகப் போய்விட்டது” என்று ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தையும் ஆக்ரோஷத்தையும் மிகக் காரசாரமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
🚨 Tanveer Ahmed compares Babar Azam’s PSL and Virat Kohli’s IPL stats and claims that Babar Azam has more runs and more centuries in T20 Cricket than Virat Kohli,Virat is retired while Babar is still playing and will break all the records. #PakistanCricket #PAKvsAUS pic.twitter.com/oUH5MEkIwk
— Tehseen Qasim (@Tehseenqasim) June 1, 2026
“>
போட்டியின் தரம், ஆட்டச் சூழல் மற்றும் அழுத்தமான நாக்-அவுட் போட்டிகளில் கோலி காட்டிய அசுரத்தனமான பெர்ஃபார்மன்ஸ் எதையும் கணக்கில் கொள்ளாமல், வெறும் ரன்களை மட்டும் வைத்து ஒப்பிடுவது முற்றிலும் தவறு என்றும், 2024 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்துவிட்டு கம்பீரமாக ஓய்வு பெற்ற விராட் கோலி மட்டுமே எப்போதுமே ‘உண்மையான ராஜா’ என்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த வாதத்தை தகர்த்து தங்களின் கருத்து மோதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
