தமிழ்நாட்டில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில், ஒரே நேரத்தில் 30 ஐஏஎஸ் (IAS) அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த மெகா மாற்றத்தின் படி, பொதுத்துறையின் சிறப்புச் செயலாளராகச் சுந்தரவள்ளியும், சுகாதாரத்துறைத் துணைச் செயலாளராக அழகுமீனாவும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக டி.ஜி.வினய்யும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிதித்துறை (செலவினம்) செயலாளராக லலிதா, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக உமா, தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநராக ரஞ்சித் சிங் மற்றும் தமிழ்நாடு கிராமப்புற வளர்ச்சித் திட்ட தலைமைச் செயல் அலுவலராக வி.ஆர்.சுப்புலட்சுமி ஆகியோர் புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

இவர்களுடன் ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக அமுதவல்லி நியமிக்கப்பட்டுள்ளதோடு, முக்கிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்களும் (Collectors) அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியராக லீலா அலெக்ஸ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக வீரப்பன், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகப் பிரதாப் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக வந்தனா கர்க் ஆகியோர் நியமிக்கப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவு, தற்போது கோட்டை வட்டாரத்திலும் சோசியல் மீடியாவிலும் மாபெரும் விவாதத்தை ஏற்படுத்தி செம வைரலாகி வருகிறது.