ஐபிஎல் 2026-ன் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் குவித்து அசுர சாதனை படைத்துள்ளார். உலகப்புகழ் பெற்ற கிறிஸ் கெயிலின் 30 பந்து சத சாதனையை முறியடிக்க வெறும் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 29-வது பந்தில் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆகி சதத்தைத் தவறவிட்டார்.

​இதனால் பெரும் ஏமாற்றமடைந்த வைபவ், தலையில் கை வைத்தபடி மிகவும் எமோஷனலாக மைதானத்தை விட்டு வெளியேறினார். டக் அவுட்டிலும் அவர் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்த காட்சி ரசிகர்களை நெகிழ வைத்தது. இருப்பினும், ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் (கிறிஸ் கெயிலின் 59 சிக்ஸர் ரெக்கார்டு காலி) அடித்த வீரர் மற்றும் ஒரு சீசனில் அதிக ரன்கள் (680 ரன்கள்) குவித்த அன்கேப்ட் வீரர் எனப் பல உலக சாதனைகளை இந்த 15 வயது சிறுவன் தன்வசப்படுத்தியுள்ளார்.