தண்ணீரில் சறுக்கும் வாட்டர் ஸ்லைடு விளையாட்டின் போது எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று குறுக்கிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அந்தப் பெண் அதிவேகமாக சறுக்கிக் கொண்டு வரும்போது, திடீரென ஒரு பாம்பு பாதையில் இருப்பதைக் கண்டு அலறுகிறார்.
இந்த பயங்கரமான அனுபவம் இணையத்தில் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், “புதிய பயத்தை உருவாக்கிவிட்டது” என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் எங்கு நடந்தது என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை என்றாலும், அருகில் இருந்த புதர்கள் அல்லது மரங்களிலிருந்து பாம்பு ஸ்லைடிற்குள் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
View this post on Instagram
“>
இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண்ணுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், தண்ணீரில் விளையாடும் பொழுது இதுபோன்ற எதிர்பாராத சூழல்கள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
