நடிகர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, முதன்முதலாக அந்த நாற்காலியில் அமர்ந்த தருணம் தமக்கு இயக்குநர் ஷங்கரின் ‘முதல்வன்’ திரைப்படத்தை நினைவுபடுத்தியதாக நடிகர் அர்ஜுன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சினிமாத் துறையில் தன்னுடன் இணைந்து பணியாற்றிய ஒரு சக கலைஞர், தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதலமைச்சராக உயர்ந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்றும், இது தமக்கு மிகுந்த பெருமையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் திரைப்படங்களில் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற அர்ஜுன், நிஜ வாழ்க்கையில் விஜய் அடைந்துள்ள இந்த அரசியல் வெற்றியை மனதாரப் பாராட்டியுள்ளார். ஒரு நடிகர், மக்களின் பேராதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வது என்பது சாதாரணமான விஷயம் அல்ல என்றும், இந்த நிகழ்வு திரையுலகினருக்கு மட்டுமல்லாமல் மக்களுக்கும் ஒரு முக்கியத் தருணமாக அமைந்திருப்பதாகவும் அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
