திமுகவிலிருந்து அதிரடியாக விலகி பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் செல்வராஜ், தற்போது மீண்டும் திமுகவிலேயே இணைந்துள்ளார். மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே கட்சியில் அதிக அதிகாரங்களும், முக்கியத்துவமும் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறிய செல்வராஜின் இந்த மறுபிரவேசம் திருப்பூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்த செல்வராஜ், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார். மாற்றுக்கட்சியினரின் ஆதிக்கம் குறித்து காட்டமாகப் பேசிவிட்டு வெளியேறிய செல்வராஜ், இப்போது மீண்டும் திமுக தலைமையிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து இணைந்திருப்பது தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது
