ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று உப்பல் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில், விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையேயான காரசாரமான வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 256 ரன்கள் குவித்த நிலையில், இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர் விராட் கோலி, ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்தே மிட்-விக்கெட் பகுதியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த டிராவிஸ் ஹெட்டை ஆஃப்-ஸ்பின் பந்துவீசுமாறு சைகை காட்டி தொடர்ந்து சீண்டினார்.

எனினும், இப்போட்டியில் 15 ரன்களுக்கு கோலி ஆட்டமிழந்த நிலையில், பின்னர் பந்துவீச வந்த ஹெட், ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதாரின் விக்கெட்டை வீழ்த்தி பதிலடி கொடுத்தார். போட்டி முடிந்து 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வழக்கமான கைகுலுக்கலின் போது விராட் கோலி, டிராவிஸ் ஹெட்டை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு மற்ற வீரர்களுடன் மட்டும் கைகுலுக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“>